இடுகைகள்

மீண்டும் வேண்டும் விடுதலை “

” பாரதி பாடித் துடித்த விடுதலை ! காந்தி மகான் காணத் துடித்த விடுதலை ! பகலுமன்றி இரவுமன்றி நள்ளிரவில் விடியலாய் விடிந்தது ,விருப்பமாய் விளைந்தது. விடுதலை தேசமாயினும் மீண்டும் , ”வேண்டும் விடுதலை” என வேண்டித்தான் நிற்கின்றோம் விருப்பித்தான் கேட்கின்றோம். வறுமையும், ஊழலும் நிரந்தரம் ஆகிவிட்டது விலைவாசி உயரத்தில் , விசுவாசம் பள்ளத்தில் உள்ளத்தின் கனவுகளில் லச்சமும் கோடியுமே ! கல்லறை நிலங்கள் கூட காணாமல் போகும் நிலை சில்லறை போல் வாணிபமும் சிதறியே போன கதை அண்டைநாட்டு தொழிலாளிகள் நம்நாட்டின் முதலாளிகள் தண்ணீர் தண்ணீர், எனக் கண்ணீர் வடிக்கப் பல, தேசங்கள் இருக்க,  பாட்டில் போட்டு விற்றுவரும் பார்களையும் தாண்டி இன்று அரசே விற்கிறது. பாஸ்மார்க் வாங்கவேண்டியவன் டாஸ்மாக் வாயிலில்... பாதைகாட்டவேண்டிய அரசு போதைஏற்றும் வேலையில்... பொதுத்துறை எல்லாம் தனித்துறை ஆக்கிவிட்டால் துரை களுக்கு  இங்கே என்ன வேலை ? சாதிக்க பிறந்தவனை சாதிக்குள் மாட்டிவிட்டு மதமும், மொழி யுமாய் பிரித் தாளும் சூழ்ச்சிக்கு , வீழ்ச்சியே ! என்றும் காட்சியாய் வேண்டும்   தாத்தா கொடுத்த

நம்பி கை வைப்போம்

வல்லரசு தேசத்தில் கூட வாழ்வாதாரம் இழந்த நிலை எம் நாட்டு மக்களுக்கோ விலைவாசி உயர்ந்த நிலை பரண் மேல் பருப்பு விலை ஒரு ரூபாவாம் அரிசி விலை தனியார் மயம் தாராள மயம் இதுதான் இவர்களது தாரகமந்திரம் இலவசங்கள் பல உண்டென்பார் இவன் வசமுள்ள ஓட்டுக்காக பல குடும்பங்கள் வறுமையில் வாட‌ சில கும்பங்களே அரசியலில் ஆட‌ போராட்டம் நடத்தகூட போதுமான உரிமையில்லை குண்டர்களும் தொன்டர்களும் கும்பலாய் தாக்குகின்றனர் குண்டு களும் தோட்டாகளும் குறிபார்த்தே இருக்கின்றன‌ கொலையும் கொள்ளயும் கொள்கையாகி விட்டன‌ புகைப்பதும் குடிப்பதும் புனிதமாகிவிட்டன‌ நோய்களும் நொடிகளும் நோகமல் உள்ளன ம‌னித‌னே ம‌னித‌னை கொல்லும் மனிதா‌பிமான‌ம் ம‌லிந்து விட்ட‌ன‌ இதயம் கூட இயந்திரத்தில் இயன்குகின்றனவாம் இப்படி நாட்டில் பிரச்சினைகளோ ஏராளம் இதில் எங்கள் பிரச்சினையும் தாராளம் கம்பம் நட்டோம் கம்பி இழுத்தோம் காளை போல் கை வ‌ண்டி இழுத்தோம் சுடும் வெயிலிலும் மண்டியிட்டோம் க‌டும் குழிகள் பல தோண்டிவிட்டோம் சாக்க‌டையினுள் புகுந்து ப‌ல‌ ஜாயிண்டு க‌ள் அடித்துவிட்டோம் க‌ணினியை கூட‌ க‌ச்சித‌மாய் க‌ண்ணிய‌மாய் இய‌க்குகின்றோம் சின்ன‌ சின்ன‌ எக்ஜேஞ்சு க‌ளுக்கு ந

என் விருப்பமும் திருப்பமும்

விருப்பம் இது கொஞ்சம் விசித்திரமானது ! பூத்துக்குலுங்கும் ரோஜா மலரில் தேன் உண்ண வண்டுக்குவிருப்பம்! பூவையர் கூந்தலில் இருந்து சிரிக்க அந்த ரோஜாவுக்கு விருப்பம்! என் எண்ணங்களில் தோன்றிய விருப்பங்களை எடுத்துக்கூற எனக்கும் கொஞ்சம் விருப்பம் ! அதிக‌ம் ப‌டித்து ப‌ட்ட‌ம் பெற‌ விருப்ப‌ம் ! ஆனால் ஏழ்மையால் ஏற்ப‌ட்டதோ திருப்ப‌ம் ! ப‌டித்த‌ ப‌டிப்பிற்கேற்ற‌ ப‌த‌வி பெற விருப்ப‌ம் ! ஆனால் ல‌ஞ்ச‌ம் என்றசொல்லால் ஏற்ப‌ட்ட‌தோ திருப்ப‌ம் ! வேலை யில்லாத்திண்டாட்ட‌த்தை ஒளித்திட‌வும் விருப்ப‌ம் ! ஆனால் வேலை தேடுவ‌தே வேலையானால் ஏற்படுமோ திருப்ப‌ம் ! நான் காத‌லித்த‌ அவ‌ளை கை பிடிக்க‌ விருப்ப‌ம் ! ஆனால் ஜாதி என்ற‌ சாக்க‌டையால் ஏற்ப‌ட்ட‌தோ திருப்ப‌ம் ! வ‌ர‌த‌ட்ஷ‌னை இல்லா திரும‌ண‌த்தில் தான் விருப்ப‌ம் ! ஆனால் த‌ட்ஷ‌னை வேண்டாமென்றதால் ஏற்ப‌ட்ட‌தோ திருப்ப‌ம் ! போதையால் பாதை மாறிப்போவோரை திசைதிருப்பவும் விருப்பம்! ஆனால் போதையே அவனுக்குப் பாதையானால் ஏற்படுமோ! திருப்ப‌ம் ஊழ‌ல‌ற்ற‌ ஆட்சியில் தான் என‌க்க்கு விருப்ப‌ம் ! ஆனால் ஊழலே ஆட்சீயானால் நாட்டில் ஏற்படூமோ நல்ல திருப்பம் ! என் விருப்பங்க‌ள் யாவும் நிரைவேறினால்

பாரதியின் கனவு‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

பாரதியின் கனவு‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ பாட்டுக்கொருவ‌ன் பார‌தி பிற‌ர் பாட்டுக்குள்ளும் ஒருவ‌ன் பார‌தி வீட்டுக்குள் அடிமை கொண்டவள் வீட்டை விட்டு வெளியில் வரக்கண்டான் ஏட்டை தொட்டால் தீமை எனற நிலை மாற்றி ஏட்டையும் பண் பாட்டையும் பாடுத‌லாய் கண்டான் மாட்டை கட்டியது போல்தொழுவில் பார்த்தவளை மாடு என்ற சொல்லே செல்வம் என பொருள் கண்டான் கர்புக்கு பெண்ணை ஒப்பிட்டாலும் பெண் பாட‌ம் க‌ற்பிப்பதாய் க‌ன‌வு க‌ண்டான் காத‌லும் சாதியும் பெண்டிற்கில்லை என்ற‌வ‌ன் காத‌லில் க‌னிந்து பெண்காவிய‌ம் ப‌டைக்க‌க்க‌ண்டான் ப‌ட்ட‌ங்களையும் பாட திட்டங்களையும் பயின்றதோடு ச‌ட்ட‌ங்க‌ளையும் ஆணுக்கு ச‌ரியாக‌ ஆழ‌க்க‌ண்டான் விட்ட‌த்தை பார்த்தேவிட‌லை ப‌ருவ‌ம் க‌ழித்த‌வ‌ள் திட்டம் போட்டுவாழ்க்கையை திருத்திடக்கண்டான் சுதந்திரக்கனவு சுந்தரமாய் பலித்ததுநிர‌ந்த‌ர‌ க‌ன‌வுக‌ளும் நிம்ம‌தியாய் ப‌லித்த‌து பெண்ணுக்காய் க‌ண்ட‌க‌னா புதுமை பெண்ணுக்காய் அமைந்த‌த‌ன்றோ! ! ! 

ச‌ண்டாளி!

கருவிழிகளின் மின்னல் கீற்றுகளாய் கண்டவளின் கண்கவர் கண்களில் வண்ணத்துப் பூச்சிகளும் வட்டமிட வண்டுகளும் மலெரென்று மொய்த்துவிட நான்மட்டும் விழாதிருப்பெனோ ! நானும் விழுந்துவிட்டேன் விண்ணவள் கண்ணுக்குள் ! நிலவவள் நெஞ்சுக்குள் ! பார்த்தோம் ப‌ழ‌கினோம்பாச‌ம் ப‌கிர்ந்தோம்தாகம் தணிக்கவே தனிமை நாடினோம் காத‌ல் தாக‌த்தால் க‌ட்டிய‌ணைத்து முத்த‌மிட‌காட்டிய‌ அவ‌சரத்தில் காத‌லிய‌வ‌ள் சொன்னாள் க‌ல்ய‌ண‌ம் ஆக‌ட்டும் மென்று காத்திருந்தேன் ம‌ணிக‌ண‌க்கில் பாத்திருந்தேன் நாள்க‌ண‌க்கில் பெண்பார்க்கும் ப‌ட‌த்தில் பித்தலாட்டம் செய்துவிட்டாள் க‌ண்ட‌ அவ‌னை க‌ண‌வ‌னென்றாள் காத‌ல‌ன் எனை க‌ள்வ‌னென்றாள் வ‌ண்டாய்சுற்றிய எனக்கு வ‌ண்டாள் தந்த பட்டம் பைத்தியமென்று ஏனென்ற‌ போது நீ என் சாதி யில்லை ம‌த‌மும் இல்லை என‌வே ந‌ம் திரும‌ண‌த்தில் ச‌ம்ம‌த‌மும் என‌க்கில்லை என்றாள் ச‌ண்டாளி!  என்றும் நீ என்னோடுதான்   சொந்தங்களே சுமையானது சோகங்களே சுகமானது பந்தங்களே பகையானது பாசங்களும் பகல் வேசமானது நெருங்கிய உறவுகளும் நெருங்காது போனது விரும்பிய உறவுகளும் விரும்பாது போனது கனிந்த காதல் கூட கசந்து போனது நோய்களும் நொடிகளும் நோகாமல் உள்ளன ப

என்னவன்

------------ ‍‍‍‍‍‍‍‍‍என்னவனே என் மனதை கொள்ளை கொண்டவனே மன்னவனே என்னுயிரை மீட்டுத்தந்தவனே உன் புகழை பாடுதற்கு உரியவள் என்றும் நான்தானே தேனமுதில் பிழிந்தெடுத்த தெள்ளமுதும் நீதானே பாலமுதில் கடைந்திட்ட‌ வெண்நெய்யும் நீதானே சிங்கமென நீ நடந்து சிரித்துவரும் வேளையிலே தங்கமென தாவணிகள் தானாகவே வந்தாலும் தடுக்கிவிழா பார்வை தனை தரணியங்கும் படைத்திட்டாய் கன்னியரின் பார்வையிலோ காளையர்கள் அழிந்திடுவ‌ர் என் க‌ண்ண‌னுன் பார்வையிலோ கன்னிய‌ர்க‌ள் வழிந்திடுவ‌ர் வான‌த்தில் இருப்ப‌தோ ப‌ல‌ந‌ட்ச‌த்திர‌ம் என் ம‌ன‌வான‌த்திலோ நீ யொரு துருவ‌ ந‌ட்ச‌த்திர‌ம் குடிப்ப‌ழ‌க்க‌ம் இல்லா நீ ந‌ல்ல‌குடிப்ப‌ழ‌க்க‌ம் உள்ள‌வ‌ன் மான‌த்திற்கு மானைச் சொல்வ‌ர் உன் த‌ன்மான‌த்திற்கு ய‌த‌னைச் சொல்வேன் க‌ண்ட‌வ‌ள் பின் செல்லாது எனைக்க‌ண்ட‌ பின் காத‌ல் கொண்டாயே மாற்றாளுக்கு ம‌னைவியெனும் மாங்க‌ல்ய‌த்தை பூட்டி விட்டால் மான‌த்தோடு மாண்டிடுவேன் மாம‌னுன் காத‌லியாய்! 

காதல் + நீ = காதலி

முந்தானை முடிப்பினிலே முடிந்து வைத்த முக்கனி போல் சந்தனத்தில் சவ்வாதை சமமாக சேர்த்ததுபோல் செவ்வாழைக் கனியினிலே செய்துவைத்த செந்தூரம் போல் சங்கீத சன்னதியில் சந்தங்களை கோர்த்தது போல் சிந்துகின்ற வான்மழையும் தங்குகின்ற தாமரையே! ஏங்குகின்ற என்மனதில் தூங்குகின்ற தூரிகையே! பார்த்து நிற்க்கும் என் விழியை காக்கவைக்கும் காரிகையே! என்காதல் தனை சொன்ன பின்னும் உன் காதல் கண்பாரா காதலியே ! உன்முகத்தில் தெரியுதடி ஓராயிரம் ஒளிநிலவு காதலெனும் கனிரசத்தை என்மீது கொட்டுவாயோ ! துளியளவு! என் காதலியாய் நீ ஆகிவிட்டால் என்மனைவியாய் நான் ஆக்கிடுவேன் !!!